பொங்கல் தொகுப்பில் பல்லி இறந்ததை சுட்டிக்காட்டிய முதியவர் மீது வழக்குப்பதிவு!

Update: 2022-01-09 11:44 GMT

கொரோனா என்ற கொடிய பெருந்தொற்று பரவத் தொடங்கியது முதல் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்கள் பண்டிகை காலங்களை மன மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்களுக்கு, தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் பொங்கல் சிறப்பு தொகுப்பு ஏழை எளிய மக்களுக்கு உதவிகரமாக அமைகிறது.

இப்படி இருக்கையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகில் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி, கூட்டுறவு பண்டக சாலை கடை இரண்டில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பு ஒன்றில் புளியில் இறந்த பல்லி இருந்தது. இச்சம்பவம் தமிழகத்தில் பேசு பொருளாகியது. இந்த குற்றச்சாட்டை சுட்டிக் காட்டிய நுகர்வோர் மீது "தமிழக அரசு மீது களங்கம்  விளைவிப்பதாக"   கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Full View

"அரசின் குறைபாட்டை சுட்டிக்காட்டினால் வழக்குப் பதிவா? அப்படி என்றால் அரசின் குறைகளை யார் கூறினாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா?" என்று சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Source -  News J

Tags:    

Similar News