3,186 காவல்துறையினருக்கு பொங்கல் பதக்கம் அறிவிப்பு.!
3,186 காவல்துறையினருக்கு பொங்கல் பதக்கம் அறிவிப்பு.!
3,186 காவல்துறை மற்றும் சீருடை அலுவலகர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்குவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறைத்துறைகளில் பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கின்ற வகையில் பொங்கல் தினத்தில் பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படும்.
அந்தவகையில் இந்த வருடம் 3,000க்கும் மேற்பட்ட காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படும் எனவும், பிப்வரி 1ம் தேதி முதல் மாதாந்திர பதக்கப்படி ரூ.400 வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 3,186 காவல்துறை, சீருடை அலுவலகர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்கவும் மாதாந்திர பதக்கப்படி ரூ.400 வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், பல்வேறு பிரிவை சேர்ந்தவர்களுக்கும் பதக்கங்கள் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.