அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட ரூ.2500! பொங்கல் பரிசு பொருட்களில் ரொக்கப்பணத்தை நீக்கிய தி.மு.க. அரசு!
தமிழர்களின் பாரம்பரியமிக்க பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திமுக அரசு வெறும் 21 பொருட்கள் என்ற அடங்கிய தொகுப்பினை மட்டும் வழங்க முடிவு செய்துள்ளது. ஆனால் ரொக்கப்பணம் என்ற வார்த்தை அறிவிக்கப்படாதது தமிழர்களிடையே அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளதாகவே கூறலாம்.

இதனிடையே தமிழகம் முழுவதும் சுமார் 2.15 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுதப்பில் ரொக்கப்பணம் என்கின்ற வார்த்தை மட்டும் நீக்கி கூட்டுறவுத்துறை புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் வெளியிட்ட சுற்றறிக்கையில் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வெளியான சுற்றறிக்கையில் ரொக்கப்பணம் நீக்கப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியின்போது பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2500 வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Daily Thanthi
Image Courtesy:Samayam