ஆபாச பேட்டி.. யூடியூப் சேனல்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த காவல்துறை.!

ஆபாச பேட்டி.. யூடியூப் சேனல்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த காவல்துறை.!

Update: 2021-01-13 17:09 GMT

சமீபகாலமாக யூடியூப் சேனல்களில் ஆபாசமான பேச்சுகள் அதிகரிக்கப்படுகிறது. இது போன்றவர்களுக்கு சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை டாக் என்ற யூடியூப் சேனலில், பெண்ணிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவியது. பெசன்ட் நகரை சேர்ந்த பெண் ஒருவர் பொது இடங்களில் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாஸ்திரி நகர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து பொது இடத்தில் ஆபாசமாக பேட்டி எடுத்ததாக சென்னை டாக் யூடியூப் சேனலை சேர்ந்த 3 பேரை சாஸ்திரி நகர் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், யூடியூப் சேனல்களில் ஆபாச பேட்டிகளை எடுத்து ஒளிப்பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, யுடியூப் சேனல்களில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையில் பதிவு செய்த வீடியோக்களை நீக வேண்டும். அப்படியில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 

அதே நேரத்தில் யூடியூப் சேனல்களில் ஆபாச பேட்டிகளை எடுத்து ஒளிப்பரப்பினால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News