புயலால் குரூப் 4 தட்டச்சு பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு.. டிஎன்பிஎஸ்சி தகவல்.!
புயலால் குரூப் 4 தட்டச்சு பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு.. டிஎன்பிஎஸ்சி தகவல்.!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ‘நிவர்’ புயலாக மாறி நாளை கரையை கடந்து செல்கிறது. இதனால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதனையொட்டி மாநில அரசு பல்வேறு மீட்டு படையை தயார் நிலையில் வைத்துள்ளது.
மேலும், புயல் தாக்கும் பகுதியகளில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். தற்காலிகமாக நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்கவும், பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தட்டச்சு பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைக்கபட்டதாக அரசுப்பணியாளர் தேர்வாணையம் கூறியுள்ளது. நவம்பர் 25, 26ல் நடைபெற இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு டிசம்பர் 8, 9-ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது என தேர்வாணையம் கூறியுள்ளது. ஏற்கனவே சிஏ தேர்வுகளும் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.