திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய ஜனாதிபதி.!
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று சென்னை வந்து, ஆளுநர் மாளிகையில் தங்கினார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று சென்னை வந்து, ஆளுநர் மாளிகையில் தங்கினார்.
இதனையடுத்து இன்று சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்து இறங்கினார். அங்கு அவரை வரவேற்று அழைத்து சென்றனர். இதன் பின்னர் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மற்றும் துணைவேந்தர் தாமரைச்செல்வி ஆகியோர் பங்கேற்றனர்.
மொத்தம் 176 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றுள்ளனர். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.