குடியரசுத்தலைவர் வருகை. சென்னையில் பாதுகாப்பு தீவிரம் !

சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு வரவேற்கிறார். இதன் பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Update: 2021-08-02 04:26 GMT

சென்னையில் அமைந்துள்ள தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படம் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. சட்டசபையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

டெல்லியில் இருந்து புறப்படும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பகல் 12.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகை தருகிறார். அங்கிருந்து கிண்டியில் உள்ள ராஜ்பவன் சென்று மதிய உணவை முடித்து சிறிது நேரம் ஓய்வுக்கு பின்னர் மாலை 5 மணிக்கு சட்டசபை மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு வரவேற்கிறார். இதன் பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ராஜ்பவன், விமான நிலையம், சட்டசபை வளாகம் செல்லும் வழி முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Source: Twiter

Image Courtesy: Twiter

Tags:    

Similar News