புதிய திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி.!

புதிய திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி.!;

Update: 2021-02-14 11:35 GMT

பிரதமர் மோடி ஒரு நாள் அரசு முறை பயணமாக இன்று சென்னை வருகை புரிந்தார். அவர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் புறப்பட்ட நிலையில், சென்னை விமான நிலையத்துக்கு காலை 10.35 மணியளவில் வந்தடைந்தார்.

இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து ‘ஹெலிகாப்டர்’ மூலமாக ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு காலை 11 மணிக்கு வந்தடைந்தார்.
இதனையடுத்து பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் வரவேற்றனர்.

மேலும், காரில் புறப்பட்டு செல்லும் வழிநெடுகிலும் அதிமுக, பாஜக, பாமக தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு கொடியசைத்து வரவேற்பு அளித்தனர். மக்களின் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது கைகளை காட்டியவாரே பிரதமர் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு சென்றடைந்தார்.
 

Similar News