விழா தொடங்கும் முன்னர் மறைந்த தலைவர்களுக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை.!

விழா தொடங்கும் முன்னர் மறைந்த தலைவர்களுக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை.!;

Update: 2021-02-14 11:53 GMT

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு நாள் அரசு முறை பயணமாக சென்னை வருகை புரிந்துள்ளார். இதனிடையே விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் மேடைக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது மேடையில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர் பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கினார். அதே போன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கினார். அப்போது அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக தொண்டர்கள் கை தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
 

Similar News