கோவை: குடிபோதையில் பயணிகளை தாக்கி அட்டூழியம் செய்யும் தனியார் பேருந்து ஊழியர்கள்!

Update: 2022-06-22 11:31 GMT

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஊழியர்கள் இரவு நேரங்களில் மதுகுடித்துவிட்டு பொதுமக்களிடம் தகாத வார்த்தைகளால் பேசும் நிகழ்வு தொடர்கதையாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கோவையில் தனியார் பேருந்துகளின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு பேருந்தில் இரண்டு முதல் நடத்துனர்கள் இருந்து கொண்டு வரும் பயணிகளிடம் பல்வேறு விதமான மிரட்டல்களை விடுப்பதும், அடிக்க பாய்வதும் வாடிக்கையாக உள்ளது.

அது மட்டுமின்றி சாலையில் நடந்து செல்பவர்களிடமும் தனியார் பேருந்து நடத்துனர்கள் தாக்கும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியடைய செய்துள்ளது. போலீசார் போதுமான நடவடிக்கையில் ஈடுபடாததால் இது போன்ற காரணங்கள் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதே போன்று வட்டார போக்குவரத்து துறையின் அதிகாரிகளும் கண்டும், காணாமல் செல்கின்றனர். இது தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

மேலும், இரவு சமயத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்து ஊழியர் மதுபோதையில் பேருந்து நிலையத்தில் இருக்கும் ஒருவரை தகாத வார்த்தைகளில் பேசியும், தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த காட்சிகளை பார்த்து மற்ற பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News