தனியார் பள்ளி வசம் இருந்த ரூ.140 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு.!
தற்போது கோவில் நிர்வாகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதால் பள்ளி வசம் இருந்த 140 கோடி ரூபாய் மதிப்புடைய 34 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
சென்னை கீழ்ப்பாக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சீதா கிங்ஸ்டன் என்ற தனியார் பள்ளி. கடந்த 1969ம் ஆண்டு முதல், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் இப்பள்ளி குத்தகைக்குச் செயல்பட்டு வந்தது. குத்தகை காலம் முடிந்த நிலையில் குத்தகைப்பணம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்தது.
இந்நிலையில், தற்போது கோவில் நிர்வாகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதால் பள்ளி வசம் இருந்த 140 கோடி ரூபாய் மதிப்புடைய 34 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
பள்ளி நிர்வாகம் பள்ளியை மூடுவதாக அறிவித்ததையடுத்து மறுகுத்தகை குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.