தமிழின துரோகி ராகுலுக்கு இங்கே என்ன வேலை - ஆவேசத்தில் அர்ஜூன் சம்பத்

ஒற்றுமை பயணித்து தொடங்க தமிழகம் வரும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அதிரடி நடவடிக்கை.

Update: 2022-09-03 02:47 GMT

ஒற்றுமை பயணத்தை தொடங்க தமிழ்நாட்டிற்கு வருகை தரும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக முழுவதும் ராகுல் காந்தி கோ பேக் என முழக்கமிட்டு கருப்பு கொடி போராட்டம் நடத்தப் போவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் தெரிவித்து இருக்கிறார். நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர் மாநகரின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று அவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சென்றது. அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.


அப்பொழுது பேசிய அர்ஜுன் சம்பத் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஆக இருக்கும் மு.க. ஸ்டாலின் அனைவருக்கும் பொதுவானவர். தி.மு.க தலைவராக இருந்தால் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லத் தேவையில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவர் இந்துக்களை புறக்கணிக்கிறார். இது கண்டிக்கத்தக்கது என்று கூறியிருக்கிறார். மேலும், தமிழகத்திற்கு ராகுல் காந்தி வருகை தர உள்ளார்.


மேலும் சிறுபான்மையாக இந்துக்கள் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அவர் வருகை தருவதும், கிறிஸ்தவ மிஷனரிகள் வெளிநாடுகளில் இருந்து நிதிகளை பெற்று அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். தற்போது இருக்கும் காங்கிரஸ் இந்திய காந்தி காங்கிரஸ் அல்ல, சோனியா காந்தி காங்கிரஸ் பொதுமக்களை ஏமாற்ற இங்கு வருகை தருகிறார். வருகின்ற ஏழாம் தேதி ராகுல் காந்தி கோ பேக் என்ற முழக்கத்துடன் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Oneindia News

Tags:    

Similar News