8 மாத குழந்தையால் பப்ஜி மதன் மனைவிக்கு ஜாமீன்.!
ஆபாசமாக பேசிய யூடியூபர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை மதன் யூடியூப்பில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் ஆபாசமாக பேசி வெளியிட்டு வந்தார்.

இதனிடையே மதன் மீது 150க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தன. அந்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேரில் ஆஜராவதற்கு உத்தரவிட்டனர். ஆனால் ஆஜராகாத மதன் சென்னையை விட்டு தலைமறைவானார்.
இதனிடையே பப்ஜி மதனுக்கு உதவி செய்ததாக மனைவி கிருத்திகாவை 8 மாத கைக்குழந்தையுடன் கைது செய்து சிறையில் அடைத்தது. இதன் பின்னர் தருமபுரியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பப்ஜி மதனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.