தேடப்பட்டு வந்த 'பப்ஜி மதன்' தருமபுரியில் கைது.!

யூடியூபர் மதன் போலீசார் தேடி வந்த நிலையில் தருமபுரியில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-06-18 05:16 GMT

யூடியூபர் மதன் போலீசார் தேடி வந்த நிலையில் தருமபுரியில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி அதனை யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளார். அதனை சிறுவர்கள் ஏராளமானோர்கள் பார்த்து வந்தனர் என தெரியவந்தது. இதனையடுத்து பப்ஜி மதன் மீது ஏராளமான புகார்கள் காவல்துறைக்கு வந்ததால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை தீவிரமாக தேடிவந்தனர். அவர் போலீஸ் தேடி வருவதை அறிந்து தலைமறைவாக இருந்தார்.

அவர் பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், இன்று தருமபுரியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சென்னைக்கு அழைத்து செல்லும் வேலையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Similar News