ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பொதுமக்கள் கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவில் நிர்வாகம் கோவில் பிரகாரங்களை பல்வேறு இடங்களில் பூட்டி வைத்தும், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பக்தர்களை முறையாக சாமி தரிசனம் செய்ய விடாமல் அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை சாமி தரிசனம் செய்யச் சென்ற உள்ளூர் பக்தர்கள், உள்ளூர் நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளூர் பொதுமக்களை அவமதிக்கும் விதமாக கோவில் நிர்வாகம் நடந்து கொண்டது.
இதனை கண்டித்து பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் ஒன்று திரண்டு, கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் முற்றுகை போராட்டத்தால் கோவில் வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.
Input From: samayam