மாணவர்கள் வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் "பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை!"

கல்லூரியில் நேரடியாக தேர்வுகளை நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அது போன்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது திமுக அரசு வழக்குகளை பதிவு செய்துள்ளது.

Update: 2021-11-22 11:34 GMT

கல்லூரியில் நேரடியாக தேர்வுகளை நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அது போன்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது திமுக அரசு வழக்குகளை பதிவு செய்துள்ளது.

இதனால் கொதிப்படைந்த மாணவர்கள் அனைத்து மாவட்டங்களில் இருந்து புறப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று உளவுத்துறைக்கு தகவல் சென்றுள்ளது.

இந்நிலையில், இன்று (நவம்பர் 22) மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இதனை தொடர்ந்து கடற்கரைக்கு செல்லும் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமின்றி பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பயந்து தற்போது மெரினா கடற்கரை சாலையை மூடியுள்ளதற்கு பொதுமக்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News