சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல தடை.!
விடுமுறை தினங்களில் அதிகமான பொதுமக்கள் குடும்பத்தினருடன் கடற்கரை பகுதிகளுக்கு செல்வது வழக்கம்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சனி, ஞாயிறு, விடுமுறை தினங்களில் சென்னையில் உள்ள மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கும் செல்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. விடுமுறை தினங்களில் அதிகமான பொதுமக்கள் குடும்பத்தினருடன் கடற்கரை பகுதிகளுக்கு செல்வது வழக்கம். இதனால் கூட்டம் அதிகமானால் தொற்று பரவலும் அதிகரிக்கும் என்பதால்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.