புதுக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ பிரகதாம்பாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா.. 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-03-04 06:30 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற புதுக்கோட்டை திருக்கோயிலைச் சார்ந்த திருவேங்கைவாசல் அருள்மிகு ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா கடந்த 28ம் தேதி அன்று முதல் கால யாக பூஜை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மூன்று நாட்களாக தொடர்ந்து ஆறாம் கால பூஜை செய்யப்பட்டது இதனையடுத்து இன்று யாகசாலை பூஜையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் கலசங்களை சிவாச்சாரியர்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து ராஜகோபுரம் மற்றும் மூல ஸ்தானத்தில் உள்ள கோபுரங்களிலும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பின்னர் வாணவேடிக்கைகள் முழங்க பக்தர்கள் சிவ சிவ என்ற முழக்கத்துடன் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோபுரம் தரிசனம் கோடி புன்னியம் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News