புலவர் புலமைப்பித்தன் காலமானார் ! அரசியல் தலைவர்கள் இரங்கல் !
அதிமுக முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன் 85, உடல் நலக்குறைவால் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில், இன்று காலை புலமைப்பித்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் நீலாங்கரையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்பொழுதே சசிகலா நேற்று நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரணை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று மற்ற அரசியல் தலைவர்களும் புலமைப்பித்தன் மறைவுக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
புலமைப்பித்தனர் கோவையில் பிறந்தவர் ஆவார். இவர் கடந்த 1964ம் ஆண்டில் திரைப்படத்தில பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். அவர் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பறியாற்றியுள்ளார். இதனை தொடர்ந்து 1968ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த குடியிருந்த கோயில் படத்திற்காக நான் யார் நான் யார் என்ற பாடலை எழுதியுள்ளார். இதன் மூலம் அவர் மிகவும் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Daily Thanthi