தென்காசியில் கொரோனா தொற்றால் டி.எஸ்.பி. உயிரிழப்பு.!

தென்காசி மாவட்டம், புளியங்குடி உட்கோட்டத்தில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவர் சுவாமிநாதன்.;

Update: 2021-06-02 10:50 GMT

தென்காசி மாவட்டம், புளியங்குடி உட்கோட்டத்தில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவர் சுவாமிநாதன்.

இவர் கடந்த ஒரு சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனிடையே சிகிச்சை பலனின்றி இன்று அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு யமுனா என்ற மனைவியும், இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டி.எஸ்.பியின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் போலீஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News