‘புரெவி’ புயல்.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழை.!

‘புரெவி’ புயல்.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழை.!

Update: 2020-12-02 16:32 GMT

புரெவி புயல் காரணமாக நாளை (2ம் தேதி) வரை தென்தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தற்போது வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நகர்ந்து வரும் ‘புரெவி’ புயல் மேற்கு, வடமேற்காக நகர்ந்து இன்று மாலை அல்லது இரவில் புயலாக மாறி, திரிகோணமலைக்கு வடக்கே இலங்கை கடலோரத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சமயத்தில் மணிக்கு 80 கிலோ மீட்டர் முதல் 90 மிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசும்.


அதன் பின்னர் 3ம் தேதி காலையில் கோமோரின் பகுதியை ஒட்டி மன்னார் வளைகுடா மற்றும் குமரிமுனை பகுதிக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றை நாளில் பாம்பனுக்கும் மிக அருகாமையில் சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களில் டிசம்பர் 2மற்றும் 3ம் தேதிகளில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
 

Similar News