புரெவி புயல் முன்னெச்சரிக்கை.. கொடைக்கானலில் வாகன போக்குவரத்துக்கு தடை.!

புரெவி புயல் முன்னெச்சரிக்கை.. கொடைக்கானலில் வாகன போக்குவரத்துக்கு தடை.!

Update: 2020-12-03 17:48 GMT

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் இன்று மாலை 7 மணி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


புரெவி புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் காற்று எங்கு அதிகமாக வீசும் என்று கணிக்கப்பட்டதோ அங்கு அனைத்து வாகன போக்குவரத்துக்கு அரசு தடை விதித்து வருகிறது.


இந்நிலையில், புரெவி புயல் கரையை கடக்கும் நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகளை நிறுத்த இருப்பதாக சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் கூறியுள்ளார்.


அதன்படி இன்று மாலை 7 மணி முதல் பேருந்துகள், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் என அனைத்து வாகனங்களும், மறு அறிவிப்பு வரும்வரை வாகன போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.


மேலும், வத்தலகுண்டு, பழனி மற்றும் அடுக்கம் சாலைகளில் பயணிக்க தடை விதித்து, சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News