அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமனம் !

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த எம்.கே.சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 11ம் தேதியுடன் நிறைவு பெற்றது. புதிய துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதும் இருந்து 160 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் 10 பேரை நேர்முகத் தேர்வுக்கு தகுதியானார்கள்.

Update: 2021-08-10 11:42 GMT

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தராக, முனைவர் ஆர்.வேல்ராஜை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த எம்.கே.சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 11ம் தேதியுடன் நிறைவு பெற்றது. புதிய துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதும் இருந்து 160 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் 10 பேரை நேர்முகத் தேர்வுக்கு தகுதியானார்கள்.

இவர்களுக்கான நேர்காணல் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி நடத்தப்பட்டது. இதில் இருந்து 3 பேர் கொண்ட பட்டியல் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் வழங்கப்பட்டது. அந்த பட்டியலில் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான முனைவர் ஆர்.வேல்ராஜை புதிய துணைவேந்தராக ஆளுநர் உத்தரவிட்டார்.

Source: The HINDU

Image Courtesy: The hindu

https://www.hindutamil.in/news/vetrikodi/news/703332-r-velraj-has-been-appointed-as-the-new-vice-chancellor-of-anna-university.html

Tags:    

Similar News