திருப்பத்தூர்: கனமழையால் ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழைநீர்.!
கிராமங்களில் இருந்தும் காய்கறிகள், தானியம், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக திருப்பத்தூர் நகர் பகுதிக்கு வரவேண்டிய சூழ்நிலை உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
திருப்பத்தூர், புதுப்பேட்டை சாலை பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. திருப்பத்தூரில் இருந்து 200க்கும் அதிகமான கிராமங்களுக்கு செல்வதற்கான பிரதான சாலையாக இந்த ரயில்வே மேம்பாலம் உள்ளது. அனைத்து கிராமங்களில் இருந்தும் காய்கறிகள், தானியம், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக திருப்பத்தூர் நகர் பகுதிக்கு வரவேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்த மேம்பாலம் மிகவும் தாழ்வான பகுதியாக இருப்பதால், மழைக்காலங்களில் மழைநீர் வெளியேறுவதற்கு வேறு வழியின்றி, மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இது பற்றிய தகவல் கிடைத்த உடன் நகராட்சி நிர்வாகம் மின்மோட்டார் மூலம் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.