தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மகிழ்வித்த கோடை மழை.!

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

Update: 2021-04-12 12:12 GMT

தமிழகத்தில் வாட்டி வதைத்த வெயிலுக்கு நடுவே இன்று பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்ததால் வெப்பம் சற்று குறைந்தது.




 


அந்த வகையில், திருச்சி சுற்றுவட்டார பகுதிகளிலும், அதிகாலையில் பெய்ய தொடங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இந்த மழையால் சூடு தணிந்துள்ளதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். அதே போன்று கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.




 


இந்நிலையில், திருப்பத்தூர், மதுரை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மேட்டூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மதியம் முதல் காற்றுடன் மழை பெய்தது. இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News