விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பகுதிகளில் மழை.. விவசாயிகள் மகிழ்ச்சி.!

விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பகுதிகளில் மழை.. விவசாயிகள் மகிழ்ச்சி.!

Update: 2021-02-21 09:14 GMT

விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் நள்ளிரவு முதல் பரவலமாக பெய்து வருகிறது.

இந்நிலையில், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், விக்கிரவாண்டி, கோலியனுர், திருவெண்ணைநல்லூர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது.

அதே போன்று கடலூர் மாவட்டம், நெல்ல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், வடலூர், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. மேலும், புதுச்சேரி மாநிலம் காலாப்பேட், கனகசெட்டிக்குளம், வில்லியனூர், மதகடிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

புதுச்சேரி நகரங்களிலும் பெய்த கனமழையால் பல இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது அறுவடை முடிந்த காலம் என்பதால், மீண்டும் உழவு பணிகளை விவசாயிகள் மேற்கொள்வதற்கு வசதியாக இந்த மழை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News