மழையால் சேதமடைந்த பயிர்கள்: நாகையில் மத்திய குழு ஆய்வு.!

மழையால் சேதமடைந்த பயிர்கள்: நாகையில் மத்திய குழு ஆய்வு.!

Update: 2021-02-05 11:50 GMT

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்து கனமழை பெய்தது. இந்த மழை சில மாவட்டங்களில் பலத்த சேதங்களை சந்தித்தது. இதில் நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி வீணாக போனது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாய பகுதிகளை பார்வையிடுவதற்காக அவற்றை மதிப்பீடு செய்வதற்காகவும் மத்திய குழுவினர் கடந்த 2 நாட்கமாக தமிழகத்தில் முகாமிட்டுள்ளனர். மத்திய குழுவினர் 2 பிரிவாக பிரிந்து விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களில் மழைச்சேதங்களை பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். சேதமடைந்த பயிர்களை ரணஞ்சே சிங், கார்க், பால் பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த குழுவானது சேத விவரங்களை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். இதன் பின்னர் எவ்வளவு நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.

Similar News