தமிழகத்தில் 2 நாட்கள் மழை தொடரும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு.!
தமிழகத்தில் 2 நாட்கள் மழை தொடரும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு.!
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. இதனால் சாலைகளில் பல இடங்களில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடருமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் தென் மற்றும் வட தமிழகத்தில் ஓரி இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள, கர்நாடக, லட்சத்தீவு பகுதியில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.