ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகிறது: மண்டபத்தில் கசிந்த முக்கிய தகவல்கள்.!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகிறது: மண்டபத்தில் கசிந்த முக்கிய தகவல்கள்.!

Update: 2020-11-30 13:01 GMT

அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினிகாந்த் அவர்கள் இன்று காலை 9 முதல் தனது ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் பேசி வருகிறார்.  கூட்டம் முடிந்ததும் அவர் அறிக்கை வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் ரஜினி காந்த் ஆங்காங்கு உள்ள வட்டார அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், மன்றத்தினரின் பொதுவான மாநில அளவிலான அரசியல் கருத்துக்கள் குறித்தும் கேட்டு வருகிறார் எனக் கூறப்படுகிறது.  

நிர்வாகிகள் ஒவ்வொருவராக தங்கள் கருத்துக்களை கூறி வருவதாகவும், அப்போது மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒருவர் விடாமல் முதல்வர் வேட்பாளராக நீங்களே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசியதாக கூறப்படுகிறது. 

அப்போது கட்சி தொடங்குவது குறித்தும் மாவட்ட செயலாளர்கள் கேட்டதாகவும், அதற்கு ரஜினி பொறுத்திருங்கள்..நான் முடிவெடுத்து அறிப்பவிப்பதாக கூறியதாக செய்திகள் வந்துள்ளன. 

மேலும் ரஜினிகாந்த் சில நிர்வாகிகளின் செயல்பாடுகளில்  தனக்கு திருப்தி இல்லை என்று கூறியதாகவும், சிலரை மாற்ற வேண்டியநிலை ஏற்படும் என்று கூறியதாகவும், சிலரது நடவடிக்கையால் கெட்ட  பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியதாக கூறப்படுகிறது.

மேலும் அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்கவே முடியாது என்று திட்ட வட்டமாக கூறியதாகவும், மேலும் தொடர்ந்து மாவட்ட செயலாளர்களிடம் தனித் தனியான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.   

எனவே இந்த நிகழ்வுகள் மூலம் அவர் வரும் தேர்தலில் அரசியலுக்கு வருவது நிச்சயம் என்றும் கட்சி தொடங்குவது, கூட்டணி, பதவிகளில் அவரது நிலைப்பாடு குறித்து இன்று  மாலை அறிவிக்கப்போகும் அறிவிப்பு மூலம் ஓரளவு தெரிய வரலாம் என கூறப்படுகிறது.  

https://www.polimernews.com/amp/news-article.php?id=129228&cid=12

Similar News