சென்னையில் அரசு செவிலியர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு.!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் சாமுண்டீஸ்வரி கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-05-11 06:20 GMT

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் சாமுண்டீஸ்வரி கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்தவர் செவிலியர் சாமுண்டீஸ்வரி, இவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 4 நாட்களாக ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளார். இதன் பின்னர் தடுப்பூசியும் செலுத்தி கொண்டபின்னும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தது மருத்துவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News