ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று முதல் 114 தடை: 2 மாதங்கள் நீடிப்பு!
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று முதல் 114 தடை உத்தரவு இரண்டு மாதங்களுக்கு அமல்படுத்த கலெக்டர் உத்தரவு.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை முதல் இரண்டு மாத காலத்திற்கு 114 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகின்றது. இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை மறுநாள் பதினோராம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகின்றது. அடுத்த மாதம் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் தேவர் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதையொட்டி இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு இன்று முதல் அதாவது வெள்ளிக்கிழமை 2 மாதங்களுக்கு 114 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் இதைத்தொடர்ந்து உத்தரவை பிறப்பித்து உள்ளார். சுமார் இரண்டு மாத காலங்களுக்கு இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட இருக்கிறது. இதைத் தவிர வருகின்ற 15-ம் தேதி வரையும் அக்டோபர் மாதம் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை வெளி மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ட்ராக்டர்கள், மோட்டார் சைக்கிள், ஆட்டோகளின் நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்த வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் மட்டுமே மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்று ஜோதி எடுத்து வர வேண்டும். அஞ்சலி செலுத்த வாகனங்களில் வருகிறவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்று தான் வரவேண்டும். இந்த உத்தரவை ராமநாதபுர மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பிறப்பித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News