ராமநாதபுரம்: குலதெய்வ கோவிலில் 17 சிலைகள் பெயர்த்து எடுத்து புதரில் புதைத்த கும்பல்!
ராமநாதபுரத்தில் குலதெய்வ கோவிலில் உள்ள 17 சிலைகளைப் பெயர்த்து எடுத்து புதரில் மறைத்து வைத்து கும்பல் போலீஸ் விசாரணை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள உருத்திர கோஷமங்கை என்ற பகுதி. இந்த உருத்திர கோஷமங்கை அருகே புதுக்குளம் என்ற கிராமத்தில் காட்டுப்பகுதியில் தர்ம முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. முத்து முனியாண்டிசாமி, கருப்பணசுவாமி, செண்பகவல்லி அம்மன் உள்ளிட்ட பரிகார தெய்வங்களின் பீடங்களும் இக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி களரில் திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் வந்து சாமி கும்பிடுவது வழக்கம்.
புதுக்குளம், ஆலங்குளம் உள்ளிட்ட ஐம்பதற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் குலதெய்வமாக பழமை வாய்ந்த இந்த கோவிலில் வழிபடுகிறார்கள். இந்த கோவில் வளாகத்திற்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் புகுந்து பின்னர் பைரவர், ராக்காயி அம்மன், இருளாகி அம்மன், செம்பகவல்லி அம்மன், பூலோகம் காத்த அம்மன் உள்ளிட்ட 17 சுவாமி சிலைகளை பெயர்த்து எடுத்துள்ளனர். முட்புதர்கள் சூழ்ந்த பகுதியில் கூரை அமைத்து அந்த சிலைகளைப் போட்டு அதன் மீது ஓலையை வைத்து மறைத்து விட்டு தப்பி சென்றுள்ளார்கள்.
நேற்று காலை கோவிலுக்கு வந்தவர்கள் பரிகார தெய்வ சிலைகள் பெயர்த்து எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். இத்தகவலை அறிந்த ஊர் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்கள். பின்னர் அனைவரும் தேடிய போது சிலைகளை மறைத்து வைத்திருந்த இடத்தை கண்டுபிடித்தனர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். மேலும் சாமி சிலை பெயர்த்து எடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் தற்போது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Input & Image courtesy: Thanthi News