தமிழக கோவிலில் திருட்டு போன பழமையான சிலை: அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!
1966 ஆம் ஆண்டு தமிழக கோவிலில் காணாமல் போன கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சி மடம் அருள்மிகு ராமநாத சாமி கோவில் அமைந்து இருக்கிறது. இந்த கோவில் அந்த பகுதியில் மிகவும் பழமையான கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் கடந்த 1966 ஆம் ஆண்டு மிகவும் பழமையான கிருஷ்ணர் சிலை ஒன்று திருட்டு போய்விட்டது. நடனமாடும் தோற்றத்தில் சிலை திருட்டு போனது குறித்து போலீசாரிடம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சிலை தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூடுதல் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார்க்கு இந்த சிலை குறித்து நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தற்போது கிடைத்திருக்கிறது. இந்த சிலை அமெரிக்காவிற்கு கடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும் இந்த சிலை அமெரிக்காவிற்கு கடத்தி செல்லப்பட்டது. உறுதி செய்யப்பட்டு பிறகு அங்கே விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தியது. போலீஸ் அதிகாரிகள் மேலும் நடனமாடும் தோற்றத்தில் உள்ள இந்த கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் உள்ள இதியானா போலீஸ் அருங்காட்சியகத்தில் இருப்பதும் தெரியவந்தது.
இந்த சிலையை தமிழகத்திற்கு மீட்டுக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் இரண்டு விஷ்ணு சிலைகள், இரண்டு தெய்வ சிலைகள் மற்றும் ஸ்ரீதேவி சிலைகள் ஆகிய ஐந்து சிலைகளும் திருட்டுப் போய் இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.இந்த ஐந்து சிலைகள் எங்கு உள்ளது என்று பற்றிய அரசாங்கம் தற்போது நடைபெற்று வருகிறது.
Input & Image courtesy: Samayam