ஆன்லைனில் ராமேஸ்வரம் தீர்த்தம், பிரசாதம் விற்பனை: இந்து முன்னணி புகார்!

Update: 2022-04-05 07:57 GMT

ராமேஸ்வரம் கோயில் புனித தீர்த்தம், பிரசாதம் ஆகியவை தனியார் நிறுவன ஆன்லைனில் விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீர்த்தங்களில் நீராடி 22வது தீர்த்தமான 'கோடி தீர்த்தம்' நீராடினால் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். இதற்காக கோயில் வளாகத்தில் தீர்த்தம் (பாட்டில்), லட்டு, அதிரசம், முருக்கு தலா ரூ.10 முதல் 20 வரை விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும், இக்கோயில் உள்ள தீர்த்தம் மற்றும் பிரசாதத்தை கோயிலுக்கு வெளியில் தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்வதற்கு அனுமதியில்லை. ஆனால் தனியார் நிறுவனம் ஆன்லைனில் கோடி தீர்த்தம், பிரசாதம், விபூதி அடங்கிய பாக்கெட்டுகளை ரூ.499 விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து கோயில் மேலாளர் சீனிவாசன் கூறும்போது, தீர்த்த பாட்டில்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. இது போன்று ஈடுபடுபவர்கள் மீது புகார் செய்யப்படும் என்றார்.

மேலும், இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் ராமமூர்த்தி கூறியதாவது: ஆன்மிக மரபு மீறி கோடி தீர்த்தம், பிரசாதத்தை வியாபார பொருளாக்கும் தனியார் நிறுவனங்கள் மீது கோயில் நிர்வாகம் ஏன் புகார் செய்யவில்லை. அதே சமயம் கோயில் பிரசாதம் மற்றும் தீர்த்த பாட்டில்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News