வந்தவாசியில் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கப்பட்டது.!

வந்தவாசியில் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கப்பட்டது.!

Update: 2021-02-26 09:58 GMT

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து அனைத்து விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி பற்றிய விவரங்களை அதிகாரிகள் சேகத்தினர். அனைவருக்கும் பயிர்கடன் தள்ளுபடிக்கான ரசீதை உடனடியாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், வந்தவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 698 விவசாயிகள் 6 கோடியே 22 லட்சத்து 24 ஆயிரத்து 739 ரூபாய் பயிர் கடன் பெற்று இருந்தனர். இதனையடுத்து வந்தவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டுறவு சங்க தலைவர் வெண்குன்றம் முனுசாமி கலந்து கொண்டு 698 விவசாயிகளுக்கு 6 கோடியே 22 லட்சத்து 24 ஆயிரத்து 739 ரூபாய் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீதுகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
 

Similar News