300 ஆண்டு பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் சிலை மீட்பு: 2 பேர் அதிரடி கைது!
300 ஆண்டு பழமையான ஆஞ்சநேயர் சிலை தற்போது மீட்கப்பட்டு இருக்கிறது.
கும்பகோணம் அருகே உள்ள பாட்டீஸ்வரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான தேனு புரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சோழர் காலத்து கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்த கோவிலில் இருந்த ஆஞ்சநேயர் சிலை கடந்த ஒரு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுப் போய்விட்டது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கற்சிலை திருட்டு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்திருக்கிறார்கள்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி ஜெயந்த் முரளி உத்தரவின் பெயரில் ஐ.ஜி தினகரன் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் பாலமுருகன் தலைமையில் ஆஞ்சநேயர் சிலை திருட்டை கண்டுபிடித்து குற்றவாளியை கைது செய்து தனிப்படை ஒன்றை அமைக்க முடிவு செய்து இருக்கிறார்கள். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி திருத்தணியை சேர்ந்த நீலகண்டன், வேலூரை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்திருக்கிறார்கள்.
திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை இவர்கள் இருவரும் வெளிநாட்டிற்கு கடத்தி சென்று பல கோடிக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதும் வெளிவந்து இருக்கிறது. திருடப்பட்ட இந்த ஆஞ்சநேயர் சிலையை நீலகண்டன் வீட்டில் இருந்த போலீசார் தற்போது மீட்டு இருக்கிறார்கள். இந்த சிலை நாயக்கர் மன்னரால் உருவாக்கப்பட்டது. மேலும் கும்பகோணம் அருகே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருடு போன 300 ஆண்டு பழமையான ஆஞ்சநேயர் சிலை மீட்பு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Input & Image courtesy: News