120 கோடி மதிப்புள்ள நிலம் - 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்கிரமிப்பு மீட்பு!

செங்கல்பட்டு அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் தற்போது மீட்கப்பட்டு இருக்கிறது.

Update: 2022-12-25 06:47 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுகா அலம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலேரிப்பாக்கம் கீழவேடு கிராமத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங்களை ஐந்து பேர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து, அதில் விவசாயமும் வீடும் கட்டி வாழ்ந்து வருகிறார்கள் என்பது தெரிய வந்து இருக்கிறது. இந்த நிலத்தில் அரசு தரப்பு மதிப்பீட்டில் சுமார் 60 கோடி ரூபாய் என்பதும், தற்போது சங்க மதிப்பு ரூபாய் 90 கோடி முதல் 1200 கோடி வர இருக்கும் என்று வருவாய் துறை தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.


மேலும் இவர்களுக்கான சாலை வசதி, மின்சார வசதி மற்றும் தேசிய மையம் ஆக்கப்பட்ட வங்கிகளில் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து அரசு சலுகைகளும் வழங்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத் தக்கது. இந்த நிலையில் செங்கல்பட்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரிய நோட்டீஸ் வழங்கப்பட்டும் இவர்கள் காலி செய்யவில்லை, அரசுக்கு சொந்தமான இடத்தில் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்கள்.


எனவே மாவட்ட நிர்வாகம் கொடுத்த கால அவகாசம் முடிந்து விட்டதால் இவர்களுடைய நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள். இணையில் அதிரடியாக நடவடிக்கையை எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் செங்கல்பட்டு டி.எஸ்.பி தலைமையில் காவல் ஆய்வாளர் உள்ளிட்டு 200க்கும் மேற்பட்ட காவலர்கள் உதவியுடன வீட்டில் உள்ள பொருட்களை வெளியில் எடுத்து வைத்த ஜே.சி.பி இயந்திரத்தின் மூலமாக ஐந்து வீடுகளை எடுத்து நிலத்தை மீட்டு இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Thanthi

Tags:    

Similar News