நீலகிரிக்கு விடுக்கப்பட்ட ரெட் அலார்ட் ! தயார் நிலையில் மீட்பு குழு !

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

Update: 2021-08-29 03:49 GMT

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நீலகிரியில் கடந்த 4 நாட்களில் சராசரி மழையாக 5.4 செ.மீ., பதிவாகியுள்ளது. இதில் 256 பேரிடர் பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களில் அனைத்து துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், 456 நிவாரண முகாம்களும் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அபாயகரமான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பு குறைப்பாடு இருக்கும் பட்சத்தில் முகாம்களில் தங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2832906

Tags:    

Similar News