சாதி வெறுப்பைத் தூண்டும்.. ரெட் பிக்ஸ் யூ ட்யூப் சேனல்.! நடவடிக்கை வருமா?

சாதி வெறுப்பைத் தூண்டும்.. ரெட் பிக்ஸ் யூ ட்யூப் சேனல்.! நடவடிக்கை வருமா?

Update: 2021-01-23 10:22 GMT

ரெட் பிக்ஸ் என்ற தமிழ் யூடியூப் சேனலை சேர்ந்த ஒரு நிருபர் சில பிராமணப் பெண்களை தொடர்ந்து கேள்வி கேட்கிறேன் என்ற பெயரில் அவதூறாகவும், தொந்தரவு செய்யும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 ஆன்லைனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோவில் புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்துக்கொண்டு பிராமணர்களுக்கு எதிராக ஜாதிவெறி தூண்டுவதையும் காணலாம்.

 பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகள் (EWS) ஒதுக்கீட்டைப் பற்றி விவாதிக்க, சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் அருகே ஒரு நிகழ்வு நடந்தது. அந்த விவாதத்தில் அரசாங்கம் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தயங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. 

அந்த நிகழ்வு முடிந்த சில தருணங்களில் ரெட் பிக்ஸ் நிருபர் பிரச்சினையை ஆரம்பித்தார். கூட்டம் கலைந்து செல்ல தொடங்கியதும் ரெட் பிக்ஸ் நிருபர் சம்மந்தமே இல்லாமல் ஹிந்துப் பெண்கள் கோவில் பூசாரிகளாக மாற முடியுமா அல்லது சங்கராச்சாரியார் ஆக முடியுமா என்று கேள்விகளை கேட்கத் தொடங்கினார். மனு தர்மத்தின் படி பெண்கள் படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பச்சையாக பொய் கூறினார். 

Full View

அவர் பின்னர் இந்து வேதங்கள், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான பதவிகள், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் ஆகியவற்றைப் பற்றியும் புகழ்பெற்ற பல பகுதியில் பதவிகள் பிராமணர்களால் மட்டுமே வகித்து வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.

 பா.ஜ.க அமைச்சரவையில் 13 அமைச்சர்கள் மட்டுமே ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆகவும் மற்ற அனைவரும் உயர் ஜாதி மற்றும் பிராமணர்கள் சேர்ந்தவர்களாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த ஆட்சி அமைய முக்கியமான காரணமாக இருந்த பிரதமர் மோடியை ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர் என்பதை வசதியாக குறிப்பிட மறுக்கிறார்.

 ஏன் பா.ஜ க அமைச்சரவையில் பெரும்பாலும் உயர் ஜாதியும் பார்ப்பனர்களும் மட்டுமே இருக்கிறார்கள் என்று தொடர்ந்து ஒரு பெண்ணை கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். மற்றொரு பெண் குறிப்பிட்ட அந்த பெண்ணை அழைத்து செல்கிறார்.  

இந்த நிகழ்வு ஆன்லைனில் வெளியாக ஆரம்பித்தவுடன் உடனடியாக வைரல் ஆகியது. பலரும் அந்த நிருபருக்கு கண்டனம் தெரிவித்ததுடன் மட்டுமல்லாமல் பிராமணர்களுக்கு எதிராக அவர் கொண்டிருக்கும் உள்ளார்ந்த தவறான எண்ணத்தையும் ஒரு பெண்ணிடம் இந்த அளவு மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதையும் குறித்து கேள்வி எழுப்பினர்.

 இந்து கோவில்களில் பெண் பூசாரிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதும், அதே போன்ற மற்ற பதவிகளை மற்ற மதங்களில் பெண்கள் வகிப்பதே எப்படி தடை செய்யப்படுகிறது என்பது குறித்தும் பலரும் வெளிச்சம் போட்டுக் காட்டினர். பலர் இந்த யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்று கோரினர். 

 இந்து மக்கள் கட்சி ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு எதிராக ஒரு புகார் பதிவு செய்யும் பணியில் இருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் இந்த நிருபருக்கு எதிராக ஒரு வழக்கு பதிவு செய்து இந்த யூடியூப் சேனலுக்கு சொந்தமான பெலிக்ஸ் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார். 

இந்து மக்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர் சத்யநாராயணன் இதுகுறித்து கூறுகையில், ஏன் பிராமணர்கள் மட்டுமே சங்கராச்சாரியார் ஆக முடியும் என்று அவர் கேட்கிறார். பிராமணர்களை மட்டும் தான் உங்களுக்கு கேட்க தைரியம் இருக்கிறதா? என்று கேள்விகளை எழுப்பினார். 

With Inputs from: The CommuneMag

Similar News