டாஸ்மார்க் நேரம் குறைத்தால் என்ன? தி.மு.க அரசிடம் கேள்வி கேட்கும் நீதிமன்றம்!
டாஸ்மார்க் நேரம் குறைக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது என்று உயர் நீதிமன்றம் கேள்வி?
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் ராம்குமார் இவர் தாக்கல் செய்த மனுவில் டாஸ்மார்க் கடைகள் மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை செயல்படுகின்றது. எனவே அதிக நேரம் காரணமாக பல்வேறு நபர்கள் மது பாட்டில் மற்றும் கையுடன் இருக்கிறார்கள். 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு சட்டப்படி மது விற்பனை செய்யக்கூடாது என்று வலியுறுத்தப்பட வேண்டும். மேலும் மது பாட்டிலில் என்னென்ன உற்பத்தி பொருட்கள் கலக்கப்பட்டுள்ளது என்பதன் விவரங்கள், தயாரிப்பாளர்கள் விவரங்களை உறுதி செய்ய வேண்டும்.
புகார் செய்ய வசதி செய்ய வேண்டும். டாஸ்மார்க் கடைகள்/ பார் மதியம் 2 மணி அளவில் இருந்து இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த ஒரு மனுவை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்ய நாராயணன் பிரசாந்த் அமர்வு விசாரித்தது. இது பற்றி நீதிபதிகள் கருத்து கூறுகையில், மிக குறைந்த நேரம் தான் டாஸ்மார்க் கடைகள் செய்யப்படுகின்றது என்று அரசு தரப்பு வக்கீல் தெரிவித்து இருந்தார்.
மது விற்பனையில் பிற மாநிலங்களை விட தமிழகம் முன்னிலையில் உள்ளது. கடைகள் செயல்படும் நேரத்தை மேலும் குறைப்பதால் அரசுக்கு இந்த இழப்பும் ஏற்படாது என்று நீதிபதிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது மாணவர்களுக்கு மதுவிற்பனை முற்றிலும் தடை செய்யப்பட வில்லையா? என்று குறித்தான கேள்வி எழுந்து, இதற்கு அரசு தரப்பு வக்கீல் பதில் கூறுகையில், 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க ஆதார் அட்டை இணைப்பு சமர்ப்பிப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறியிருந்தார். ஆனால் பிரச்சனையின் தீவிரம் கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தி இருக்கிறார்கள். டாஸ்மார்க் மதுபான கடைகளில் விற்பனை நேரத்தை குறிக்க எத்தனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் டிசம்பர் 1ஆம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்படும் இருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar