நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி! சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்!

நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி! சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்!

Update: 2021-01-19 13:07 GMT

கொரோனா தொற்று காலத்தில் தூய்மை பணியாளர்களின் பணி மிகவும் போற்றுதலுக்குரிய விஷயமாகும். தங்களது குடும்பத்தினரை விட்டு நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இரவு, பகல் என்று பாராமல் வேலை செய்து வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் நேரத்தில் சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த துப்புரவு பணியாளர்கள் 700 பேரை வேலையை விட்டு விலக மாநகராட்சி அறிவித்தது.

இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்தனர். நாட்டு மக்களுக்காக சேவை செய்கின்றவர்களை வேலையை விட்டு நீக்குவது சரியில்லை என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருந்தார். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை முழுவதிலும் கூடுதலான தடுப்பூசி மையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அனைவரும் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். தொடர்ந்து பேசிய அவர், தூய்மை பணியாளர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்யவில்லை. நீக்கப்பட்ட 200 பேருக்கு மீண்டும் பணிவழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News