பாதுகாப்பு பணிக்கு ஆட்கள் தேர்வு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் புதிய அறிவிப்பு!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பணியில் பாதுகாப்புக்காக அவுட்சோர்ஸ் முறையில் முன்னாள் ராணுவ வீரர்களை நியமனம் செய்வதற்கான ஒப்பந்தத்தை கோயில் நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இதனால் மதுரை மாவட்டம் மிகப்பெரிய சுற்றுலாத்தலமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் கோயில் பாதுகாப்பு பணிகளுக்காக தினமும் 100 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் சார்புடைய கோயில்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட முன்னாள் ராணுவ வீரர்களை அவுட்சோர்சிங் முறையில் தேர்வு செய்யவும் கோயில் நிர்வாகம் சார்பில் ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு பணிகளுக்காக 67 முன்னாள் ராணுவ வீரர்கள், மின் உதவியாளர், ஓட்டுநர், பிளம்பம் என்று 79 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை. இதில் சேருவதற்கு ஓய்வு பெற்ற 30 முதல் 50 வயதுடைய முன்னாள் ராணுவ வீரர்கள் தகுதியுடையவர்கள் ஆவார். இதில் சேர்வதற்கு பல்வேறு நிபந்தனைகளை கோயில் நிர்வாகம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: News 7 Tamil