மருத்துவ மாணவர் தரவரிசைப்பட்டியல் வெளியீடு.. திருப்பூர் மாணவி முதலிடம்.!
மருத்துவ மாணவர் தரவரிசைப்பட்டியல் வெளியீடு.. திருப்பூர் மாணவி முதலிடம்.!
கொரோனா தொற்று காரணமாக கல்வி நிலையங்களில் பல தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. அதே போன்று மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப்பட்டியல் இன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் மருத்துவப் படிப்பு கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேர 38 ஆயிரம் மாணவர்கள் இந்த ஆண்டு விண்ணப்பித்து உள்ளனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.
710 மதிப்பெண்களுடன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீஜன் முதலிடம் பிடித்துள்ளார். 705 மதிப்பெண்களுடன் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மோகனபிரபா 2ம் இடம் பிடித்துள்ளார். சென்னை அயனம்பாக்கத்தை சேர்ந்த ஸ்வேதா 701 மதிப்பெண்களுடன் 3ம் இடம் பிடித்துள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கையாக, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என்றும், நாள் ஒன்றிற்கு 500 பேர் அழைக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.