ரெம்டிசிவிர் மருந்து வாங்க சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்.!

சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டிசிவிர் மருந்து வாங்குவதற்காக 4வது நாளாக வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குவிந்து வருகின்றனர்.

Update: 2021-04-29 05:00 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் பல லட்சம் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். அதன் பாதிப்பு தமிழகத்திலும் அதிகமாகவே உள்ளது. தினமும் கொரோனா தொற்று ஏறுமுகமாகவே உள்ளது. இருந்தாலும் குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.




 


இந்நிலையில், சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டிசிவிர் மருந்து வாங்குவதற்காக 4வது நாளாக வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குவிந்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டிசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News