'மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும்' - வலுக்கும் மக்கள் கோரிக்கை

மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை மனு.

Update: 2022-11-15 13:25 GMT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும், தூத்துக்குடி வாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் மனு ஒன்றை அளித்து இருக்கிறார்கள். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 16 பேர் உட்பட பல கிராம மக்கள் மனு ஒன்றை கொடுத்து இருக்கிறார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை தற்பொழுது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாரம் தோறும் திங்கள் கிழமை விடாமல் மக்கள் வந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் மற்றும் அதனை திறப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ச்சியான வண்ணம் மனு கொடுத்து வருகிறார்கள்.


அந்த வகையில் நேற்று திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது கிராம மக்கள் மற்றும் மீனவ மக்கள், அனைவரும் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருக்கிறார்கள். மனு அளித்த பின் அவர்கள் வெளியே வந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், நான்கு ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருப்பதால் தாங்கள் வேலை இழந்து வீட்டிலேயே முடங்கி இருக்கிறோம். 


மேலும் ஆலையை திறந்தால் தங்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக ஆலைத்தரப்பில் தெரிவித்தார்கள். ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க வேண்டும். எங்கள் வீடு தேடி வந்து உதவி செய்வதும்,தற்பொழுது தொடர்ந்து உதவி செய்தது ஸ்டெர்லைட் ஆலை தான் என்று தெரிவித்தார்கள். மீனவ சொசைட்டியை சேர்ந்த மோகன் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை சில ஆண்டுகளாக நான் வேலை பார்த்தேன்..எனக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை. எனவே உடனடியாக அவற்றைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

Input & Image courtesy:



Tags:    

Similar News