நாடு முழுவதும் மதிய உணவுத்திட்டத்துக்கு காமராஜர் பெயர்.. மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்த நாடார் அமைப்பு.!
தமிழகத்தில் ஏழைக்குழந்தைகள் கல்வி பயின்ற காலத்தில் அவர்கள் மதியம் உணவு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தனர். அவர்களின் பசியை போக்குவதற்காக முதலமைச்சராக இருந்த காமராஜர் மதிய உணவுத்திட்டத்தை தொடங்கினார்.
தமிழகத்தில் ஏழைக்குழந்தைகள் கல்வி பயின்ற காலத்தில் அவர்கள் மதியம் உணவு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தனர். அவர்களின் பசியை போக்குவதற்காக முதலமைச்சராக இருந்த காமராஜர் மதிய உணவுத்திட்டத்தை தொடங்கினார்.
இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பயில்வதற்கு பள்ளிகளுக்கு வருகை புரிந்தனர். இந்த திட்டம் இன்று வரை நீடித்து வருகிறது. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் மதிய உணவில், சாப்பாடு, முட்டை, கொண்டை கடலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மற்ற மாநிலங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மதிய உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என்று அகில இந்திய நாடார் கூட்டமைப்பு மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது. அப்போது நாடார் கூட்டமைப்பின் சார்பில் என்.ஆர்.தனபாலன், ராஜ்குமார் உள்ளிட்ட நாடார் சமூகத் தலைவர்கள் உடனிருந்தனர்.