தமிழகத்தில் தீவிரமடைகிறதா கொரோனா. முக்கிய சுற்றுலா பகுதிக்கு வெளியாட்கள் செல்வதற்கு கட்டுப்பாடு !
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், வால்பாறை பகுதிக்கு வெளியாட்கள் வருவதற்கு, மாவட்ட சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.;
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், வால்பாறை பகுதிக்கு வெளியாட்கள் வருவதற்கு, மாவட்ட சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை சற்று ஓய்ந்து வரும் நிலையில், மீண்டும் கொரோனா தொற்று பல்வேறு இடங்களில் தீவிரமடைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கோயில்கள் மற்றும் கூட்டம் அதிகமாக கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது. சென்னையில் 9 இடங்களில் அடுக்குமாடி கடைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுற்றுலா தலமாக விளங்கும் வால்பாறைக்கு வெளியாட்கள் வருவதற்கு தடை விதித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அது மட்டுமின்றி அட்டகட்டி, ஆழியார், மழுக்குப்பாறை ஆகிய சோதனைச் சாவடிகளில் வாகன தணிக்கை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வால்பாறை நகரில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக நடுமலைச் சாலை, காமராசு நகர், ஸ்டேன் மோர் சாலை, முடீஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் சோதனைச் சாவடிகள் திறக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
Source: Topnews
Image Courtesy: Indian Express
https://www.toptamilnews.com/echo-of-corona-spread-restriction-of-foreigners-to-come-to-valparai/