பட்டாசு வெடிப்பதில் நேர கட்டுப்பாட்டை மீறினால் கடும் நடவடிக்கை - டி.ஜி.பி எச்சரிக்கை!
நேர கட்டுப்பாட்டை மீறினால் மீறி பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரிக்கை.
தீபாவளி பண்டிகை வருகின்ற 24-ஆம் தேதி திங்கட்கிழமை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை போலீஸ்காரர்கள் வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் மாலை மற்றும் காலை 2 மணி நேரம் மட்டும்தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று நேர கட்டுப்பாடும் உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவிற்கு இணங்க உயர்நீதிமன்றம் உத்தரவின் பெயரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதியப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை மற்றும் விற்கவும் வெடிக்கவும் வேண்டும்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி தீபாவளி அன்று காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மட்டும்தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் தீபாவளி பண்டிகை அன்று நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பட்டாசுகளை மோட்டார் சைக்கிளில் எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறி அல்லது உரிமம் இன்றி பட்டாசு பெற்றால், அனுமதிக்கப்பட அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்தால், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேற்கூறிய வழிமுறைகளை கடைப்பிடித்து குற்றங்கள் இல்லாத நிலையில் தீபாவளி உறுதி செய்ய சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பாதுகாப்புடன் மகிழ்ச்சியுடன் இந்த தீபாவளியை கொண்டாட அனைத்து பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Input & Image courtesy: News