மணல் கடத்தல்.. தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர்கள் மீது தாக்குதல்.. திமுக ஊராட்சி மன்ற தலைவர்..

மணல் கடத்தலை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளரை தாக்கிய திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்.

Update: 2023-05-30 04:05 GMT

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பிரபாகரன் என்பவர். இவருடைய கட்டுப்பாட்டிற்குள் 16 வருவாய் கிராமங்கள் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு நரசிங்கபுரம் கிராமத்தில் செம்மண் கடத்தி வருவதாக துறையூர்bவருவாய் ஆய்வாளர்க்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இது பற்றி வருவாய் ஆய்வாளர் பிரபாகரனுக்கு தகவல் கொடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக சம்பவ இடத்திற்கு வருவாய் அலுவலர் சென்றார். அப்போது பச்சைமலை அடிவாரத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சிலர் இயந்திரத்தை பயன்படுத்தி மணல் அள்ளிக்கொண்டிருந்தார்கள்.


இதனை கண்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் விரைவாக அவர்களை தடுக்க இயந்திரத்தின் சாவியை எடுத்துக் கொண்டு தன்னுடைய அலுவலகத்திற்கு சென்றார். இப்போது அங்கு மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்து கொண்டிருந்தவர்கள் வருவாய் ஆய்வாளரின் வழி மறித்து குறிப்பாக அவர் மீது தாக்குதலும் நடத்தி இருந்தார்கள். 


இது பற்றி விசாரணை செய்யும் பொழுது இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக பிரமுகர் மகேஸ்வரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பலரும் இந்த ஒரு செயலில் ஈடுபட்டு இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. ஊராட்சி மன்ற தலைவர் திமுகவில் இருக்கும் ஒரே காரணத்திற்காக இப்படிப்பட்ட செயல்களில் அராஜகமாக எடுப்பதாகவும் பொதுமக்கள் சார்பில் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Vikatan News

Tags:    

Similar News