சாலையோரம் கடையை அடித்து நொறுக்கிய அரசு - வாழ்வாதாரத்தை இழந்த பெண் கதறல்!
அமைச்சரின் உத்தரவினால் திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் வாழ்வாதாரத்தை அளித்து விட்டார்களே என கண்ணீர் விட்டு புலம்பும் பெண்.;

பொதுப்பணித்துறை அமைச்சரின் உத்தரவில் பின்பற்றி ஆக்கிரமிப்பு என்று கூறி திருவண்ணாமலை சாலையோர வியாபாரியின் வளையல் கடையை JCP இயந்திரம் கொண்டு நகராட்சி நிர்வாகம் நொறுக்கியதால், நடுரோட்டில் புலம்பும் பெண். தன்னுடைய வாழ்வாரத்தை இழந்த பெண் சாலைகள் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை ஒட்டி உள்ள வட ஒத்தவாடை தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வளையல் கடை தீப திருவிழாவிற்கு இடையூறாக இருப்பதாக கூறி நகராட்சி நிர்வாகிகள் எந்த கால அவகாசமும் வழங்காமல் JCP எந்திரத்தைக் கொண்டு அந்த கடைய நொறுக்கினார்கள்.

இதனால் தனது குடும்ப வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்ததாக கவிதா என்ற பெண் சாலையில் அமர்ந்து எங்கள் குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து விட்டார்களே? என்று அழுகின்றார். நகராட்சி நிர்வாகிகள் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் 25 ஆண்டு காலமாக அந்த பகுதியில் வளையல் கடை வைத்திருந்த அந்த பெண்ணின் தள்ளுவண்டி கடையில் நகர்த்திக் கொண்டு செல்ல அறிவுரை வழங்காமல் JCP எந்திரத்தை கொண்டு அடித்து நொறுக்கி இருக்கிறார்கள்.

மேலும் இந்த ஒரு சம்பவம் காரணமாக தன்னுடைய வாழ்வாதாரரும் பாதிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். இப்படி ஒரு மனிதாபிமானமற்ற சம்பவம் அரங்கில் உள்ளது சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். மேலும் தங்களிடம் நகராட்சியினர் பணத்தை மட்டும் வசூல் செய்து கொண்டு, தீப திருவிழாவின்போது எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் என்னுடைய கடையை இடித்து நொறுக்கி இருக்கிறார்கள் என்று அவர் கூறிய இருக்கிறார்.
Input & Image courtesy: Dinamalar